Last Updated : 09 Oct, 2020 07:52 AM

 

Published : 09 Oct 2020 07:52 AM
Last Updated : 09 Oct 2020 07:52 AM

பாஸ்வானின் கனவான பிஹார் வளர்ச்சி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மோடி அரசு நிறைவேற்றும்: அமித் ஷா உறுதி

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி


உடல்நலக்குறைவால் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் கனவான பிஹாரின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், முன்னேற்றம் ஆகியவற்றை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்நநிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றுக் காலமானார்.

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ ராம்விலாஸ் பாஸ்வானின் கனவான பிஹாரின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், முன்னேற்றம் ஆகியவற்றை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது.

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு என்னை வேதனையடைச் செய்கிறது. ஏழைகளின் நலனுக்காகவும், உரிமைகளுக்காவும் எப்போதும் போரிட்டவர் பாஸ்வான். அவரின் அரசியல் வாழ்வு எப்போதுமே தேசியநலன் சார்ந்தும், பொதுநலனை பிரதானமாகக் கொண்டும் இருந்தது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கும்.

1975-ல் நடந்த அவசரநிலையை எதிர்த்துப் போராடியபோதும், கரோனா வைரஸ் காலத்தில் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியதிலும் ராம்விலாஸ் பாஸ்வானின் பங்கு அளப்பரியது. பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பாஸ்வான் பணியாற்றியுள்ளார்.அவரின் எளிமை, கனிவான குணத்தால் அனைவராலும் விரும்பப்பட்டார்.

ராம்விலாஸ் பாஸ்வானை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் “ ராம்விலாஸ் பாஸ்வான் அனுபமிக்க, மூத்த தலைவர். மத்திய அமைச்சராக பலமுறை இருந்துதனது பணிகளைச் செய்தவர். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கா தொடர்ந்து பணியாற்றிய பாஸ்வான், நீண்டகாலம் எம்.பியாக இருந்த சாதனையைக் கொண்டவர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x