

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17வது நாளாக 10 லட்சத்துக்கு கீழ் உள்ளது.
நாட்டில் கோவிட் பரிசோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 140 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் செயல்படுகிறது.
மற்றொரு சாதனையாக 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான பரிசோதனையின் தேசிய சராசரி 865 ஆக உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் (11,94,321 )பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 49 லட்சத்தை (49,25,279) கடந்துவிட்டது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 85.25%-மாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர்.