

ஜிகாதி இதழுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதியவர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்திய காஷ்மீருக்கு வர 2 ஆண்டுகளுக்கு 3 முறை அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள உறவினர் களை சந்திக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவ்வாறு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த அனுமதியின் அடிப் படையில் நேற்று முன்தினம் இந்தியப் பகுதிக்கு வந்த அஸ்லம் மாலிக் (68) என்ற முதியவரிடம் ஜிகாதி (புனிதப் போர்) இதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், நேற்று அவரை பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள சகன்-தா-பாத் எல்லைச் சாவடி வழியே திருப்பி அனுப்பினர்.
ராவல்பிண்டி நகரைச் சேர்ந்த மாலிக், ரஜவுரி மாவட்டத்தில் வசிக்கும் தனது சகோதரர்களை சந்திக்க, பூஞ்ச் ராவலாகோட் இடையிலான வாராந்திர பேருந்து மூலம் இந்திய காஷ்மீருக்கு வந்தார்.