1567 பொதுக்கழிவறைகள்: இமாசலப் பிரதேசம் சாதனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

1567 சமூதாய, பொதுக்கழிவறைகளை அமைத்து இலக்கை தாண்டி இமாசலப் பிரதேசம் சாதனை படைத்துள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, கடந்த மாதம் உத்தரகாண்ட், இமாசலப் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், மூத்த அதிகாரிகளுடன் உரையாற்றினார். அப்போது அவர், ஜிஎஃப்சி சான்றிதழ் பெறுவதற்கு நகரங்களை தயார்படுத்துவதற்கு மாநிலங்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தினார்.

மேலும் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் கழிவறை வசதிகளை முறையாக பராமரிப்பதை நோக்கமாக கொண்டு தங்களது ஓடிஎஃப்+, ஓடிஎஃப்++ தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.மேலும் 2022-ம்ஆண்டுக்குள் மாநிலத்தின் பாதி அளவு நகரங்கள் 3 நட்சத்திர ஜிஎஃப்சி அந்தஸ்தை பெற முயற்சிக்கவும் வலியுறுத்தினார்.

இந்த உரையாடலின் போது இமாசலப் பிரதேச மாநிலம் 1,567 சமுதாய, பொதுகழிவறைகளைக் கட்டி 876 என்ற இலக்கை தாண்டியது குறித்து தெரிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் 20,750 (75%)தனிப்பட்ட வீட்டு கழிவறை பயன்பாடுகளை கட்டியுள்ளது. 2,611 என்ற இலக்கை தாண்டி 4642 சமுதாய/பொதுக்கழிவறைகள் கட்டியுள்ளது.

மாநிலங்கள் தனிப்பட்ட வீட்டுக் கழிவறை பயன்பாடுகளுக்கான இலக்கை விரைவாக அடையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இமாசலப்பிரதேச மாநிலம் தினமும் 369.46 டன்(98%) கழிவுகளை செயலாக்குவதாக கூறியது. உத்தரகாண்ட் தினமும் உருவாக்கப்படும் கழிவுகளில் 901.45 டன் செயலாக்கப்படுவதாக கூறியது. மேலாண்மை தகவல் அமைப்பை தொடர்ந்து புதுப்பிப்பதை உறுதி செய்யும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in