

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ‘மேலிடம் காலி’, பலதரப்பட்ட பயிர்களின் விதை விதைக்கும் காலமும், அறுவடை செய்யும் காலமும் அவருக்குத் தெரியாது, அவருக்கு ஒன்றும் தெரியாது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ராகுல் காந்தி எதிர்த்துப் போராடுவது பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கூறிய முக்தர் அப்பாஸ் நக்வி, “நாடாளுமன்றம் மசோதாக்களை தாக்கல் செய்யும் போது மக்கள் முன்னிலையில் அதை கிழித்தெறிவதற்கும் அதை முட்டாள்தனமானது என்றும், தொல்லை என்றும் கூறுவதற்கு இது மம்மி-ஜி அரசோ, மன்மோகன்-ஜி அரசோ இல்லை என்று யாராவது ‘பப்பு’விடம் யாராவது கூறுங்கள்.
இது மோடிஜியின் அரசு இந்த அரசு விவசாயிகள் ஏழைகளுக்காகவே பாடுபடும் அரசு.
இப்படிப்பட்ட அரசியல் போலித்தனங்களுக்கெல்லாம் எங்கள் அரசு மடியாது. மேலிடம் காலியான ஒருவர் வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளலாம். என்னமாதிரியான விவகாரங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம் என்பது பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
ராபி மற்றும் காரிஃப் பயிர்கள் எப்போது விதைக்கப்பட்டு எப்போது அறுவடை செய்யப்படுகின்றன என்பது கூடத் தெரியாது” என்றார்.