Published : 07 Oct 2020 03:53 PM
Last Updated : 07 Oct 2020 03:53 PM

ரெம்டெசிவிர் மருந்தின் காப்புரிமையை ரத்து செய்க, பேராசை பன்னாட்டு மருந்து நிறுவனத்தை ஆதரிக்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு இயக்கம் வலியுறுத்தல் 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு, கரோன வைரஸ் சிகிச்சையில் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தின் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும், பேராசை பிடித்த பன்னாட்டு மருந்து நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன் புதன்கிழமை எழுதிய கடிதத்தில் காப்புரிமைச் சட்டம் பிரிவு 66-ன் கீழ் ரெம்டெசிவிர் மருந்தின் காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியது.

மேலும் உலக வர்த்தக அமைப்பிடம் உயிர்காக்கும் மருந்தின் மீதான காப்புரிமை, அறிவார்த்த சொத்துரிமையை வலியுறுத்தக் கூடாது என்று இந்தியா அந்த அமைப்பிடம் கோரிக்கை வைக்கவுள்ளதையும் குறிப்பிட்டு மோடி அரசைப் பாராட்டியுள்ளது.

மனிதர்களுக்கு இந்தக் கடினமான காலக்கட்டத்தில் குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது அவசியம்.

வாக்சின், சிகிச்சைக்கான மருந்துகள், நோய்க்கணிப்பு முறைகள் ஆகியவற்றுக்காக பொது மக்கள் வரிப்பணம் ஏகப்பட்டது செலவிடப்படுகிறது. ஆனால் இதனை தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் வழிமுறைகளைத் தங்களுக்குள்ளாகவே பாதுகாக்கும் என்றால் அது சரியாகாது.

நிறைய நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்வதில்லை என்பதால் மக்களின் தேவையை பூர்த்தி செய்வது கடினம். அரசு, பேராசைப்பிடித்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் ரெம்டெசிவிர் காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும்.

ஜிலீட் நிறுவனம் காப்புரிமையை போட்டியை கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்துகிறது.

ஜிலீட் நிறுவனம் இந்திய ஜானரிக் நிறுவனங்களுக்கு 7 உரிமங்கள் அளித்த போதிலும் ரெம்டெசிவிர் விலை குறைந்தபாடில்லை.

ரெம்டெசிவிர் மருந்து ஒரு குப்பி விலை ஒரு டாலருக்கும் கீழ்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகையில் இந்திய ரூபாயில் அது ரூ.4000, 5,400க்கு விற்கப்படுகிறது.

எனவே பிரதமர் மோடி இது தொடர்பாக கவனமேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கடிதம் எழுதியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x