Last Updated : 06 Oct, 2020 12:28 PM

 

Published : 06 Oct 2020 12:28 PM
Last Updated : 06 Oct 2020 12:28 PM

கரோனாவிலிருந்து மீண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரிதாப மரணம்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் சந்திர திரிவேதி கரோனாவிலிருந்து மீண்டார், ஆனால் அவர் நுரையீரல் ஃபைப்ராசிஸ் நோயினால் குர்கவான் மருத்துவமனையில் மரணமடைந்தார், இவருக்கு வயது 65.

நுரையீரல் ஃபைப்ராசிஸ் என்பது, நரையீரலின் ஆழமான திசு ஒன்று அடர்த்தியாகி நெகிழ்வுத் தன்மையற்று இறுகி விடும். இதனால் ரத்தத்திற்கு போதிய பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். கைலாஷ் திரிவேதிக்கும் இதுதான் மரணம் சம்பவிக்கக் காரணமாகும்.

சஹாரா தொகுதி எம்.எல்.ஏ.அவான திரிவேதி, இவர் அக்டோபர் 2ம் தேதி உடல்நிலை மோசமடைய ஜெய்ப்பூரிலிருந்து குர்கவான் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள் இரவு இவர் பரிதாபமாக மரணமடைந்தது தொண்டர்களையும் குடும்பத்தினரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்று கூறப்படுகிறது, ஆனால் நுரையீரல் நோய் தீரவில்லை.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன் இரங்கல் செய்தியில், “கைலாஷ் திரிவேதியின் மரணம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு என் இதயபூர்வ இரங்கல்கள். இவர்கள் இந்தக் கடினமான காலக்கட்டத்தில் மனவலுவுடன் திகழட்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x