ஒரு ரூபாய் நோட்டுகள் ரூ.50 ஆயிரத்துக்கு பெங்களூருவில் ஏலம்

ஒரு ரூபாய் நோட்டுகள் ரூ.50 ஆயிரத்துக்கு பெங்களூருவில் ஏலம்
Updated on
1 min read

பெங்களூருவைச் சேர்ந்த மருதர் ஆர்ட்ஸ் என்ற ஏல நிறுவனம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் சிலவற்றை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் தண்டி சத்யாகிரக போராட்டத்தை தொடங்குவதற்கு முன் 1930 மார்ச்சில் காங்கிரஸ் கமிட்டி செயலாளருக்கு கைப்பட எழுதிய கடிதம் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

மேலும் நவாநகர் குமார் ரஞ்சித் சிங்குக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.2.25 லட்சத்துக்கும், காந்தி கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்று ரூ.1.7 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. இந்த ஏலத்தில் 1969-ல் வெளியிடப்பட்ட சிறப்பு எண்களைக் கொண்ட ஒரு ரூபாய் நோட்டுகளும் ஏலம் விடப்பட்டன. 100000, 111111, 222222, 444444 என எண்களைக் கொண்ட இந்த ஒரு ரூபாய் நோட்டுகள் தலா ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in