

வங்கிக் கடன் தவணை சலுகை தொடர்பாக கே.வி.காமத் குழு, ரிசர்வ் வங்கிக்கு அளித்த பரிந் துரையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பல்வேறு துறைகளில் கடன் சீர மைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி நியமித்த கே.வி.காமத் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள் ளது. இதன்பேரில் ரூ.2 கோடிக்கும் குறைவான அனைத்து கடன்களுக்கும் வட்டி, தவணை செலுத்த 6 மாத காலம் சலுகை அளிக்கப்பட்டது.
இந்த சலுகை காலத்தில் வட்டி மீதான வட்டி விதிப்பதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வட் டிக்கு வட்டியை ரத்து செய்வதோடு அந்தத் தொகையை அரசே ஏற்ப தாக கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் நேற்று மீண்டும் வந்தது. அப் போது மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தவணை தொகை மீதான வட்டிக்கு வட்டி வசூலிப்ப தாக புகார் வந்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். அப்போது பல் வேறு துறைகளின் பாதிப்பு குறித் தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:
கே.வி.காமத் குழுவின் அறிக் கையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரு வாரத்துக்குள் தாக் கல் செய்ய வேண்டும். கடன் தவ ணைக்கு சலுகை அளிப்பது குறித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை களையும் தாக்கல் செய்ய வேண் டும். அத்துடன் சலுகை பட்டியலில் விடுபட்டுப் போன ரியல் எஸ்டேட் மற்றும் மின்னுற்பத்தி நிறுவனங் கள் தெரிவித்துள்ள பிரச்சினை களையும் பரிசீலிக்க வேண்டும்.
இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ), ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கம் (கிரெடாய்) உள்ளிட்ட அமைப்புகள் இதுதொடர்பாக தாங்கள் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த கோரிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லாம். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித் துள்ளனர்.