

சீன விமானப்படை திறன் மிக்கது அல்ல என்றும் எந்த அச்சுறுத்த லையும் சமாளிக்க நமது விமா னப் படை தயாராக உள்ளதாக வும் விமானப் படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா தெரிவித் துள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா டெல்லியில் நேற்று செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
லடாக்கின் கிழக்குப் பகுதி யில் சீன எல்லை உட்பட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான அளவுக்கு நமது விமா னப்படை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க விமானப்படை தயாராக உள்ளது.
இந்திய விமானப்படை அள வுக்கு சீனாவின் விமானப்படை திறன்மிக்கது இல்லை. அதே நேரம் எதிரியை குறைவாக மதிப் பிடக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கு எல்லையில் மோதல் ஏற் பட்டால் அதை சமாளிக்க நமது விமானப்படை தயாராக உள்ளது. லடாக் ஒரு சிறிய பகுதி. முக்கிய மான அனைத்து பகுதிகளிலும் விமானப்படையினர் நிறுத்தப்பட் டுள்ளனர். எந்த சூழலையும் சமாளிக்கும் வல்லமை விமானப் படைக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.