செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது எப்படி? - ரெய்ஸ் 2020 மாநாடு இன்று தொடக்கம்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது எப்படி? - ரெய்ஸ் 2020 மாநாடு இன்று தொடக்கம்
Updated on
1 min read

சுகாதாரம், கல்வி, உள்ளிணைத்தல் மற்றும் சமூக அதிகாரம் அளித்தலுக்காக செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ரெய்ஸ் 2020 மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு பற்றிய ரெய்ஸ் 2020 சர்வதேச மெய்நிகர் மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து நிபுணர்கள் பங்கு கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இருக்கிறார்கள்.

சுகாதாரம், கல்வி, உள்ளிணைத்தல் மற்றும் சமூக அதிகாரம் அளித்தலுக்காக செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ரெய்ஸ் 2020 மாநாட்டின் நான்காம் மற்றும் ஐந்தாவது நாட்களில் தொழில் துறை தலைவர்கள் பேச இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள்.

கூகுள் ரிசர்ச்சின் இயக்குநர் டாக்டர் மனிஷ் குப்தா, ஐபிஎம் இந்தியா சாப்ட்வேர் லேப்ஸ் துணைத் தலைவர் கவுரவ் சர்மா, நோக்கியா சாஃப்ட்வேர் தலைவர் பாஸ்கர் கோர்த்தி, ஐபிஎம் ரிசர்ச் இந்தியா இயக்குநர் கார்கி தாஸ் குப்தா, டிஜிட்டல் விவகாரங்களுக்கான பிரான்ஸ் தூதர் திரு ஹென்றி வெர்டியர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 அக்டோபர் 5 முதல் 9 வரை நடத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in