Published : 05 Oct 2020 06:50 AM
Last Updated : 05 Oct 2020 06:50 AM

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

புதுடெல்லி

‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தை, 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று மத் திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரில் உரு வாகிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்ச லால் உலக அளவில் 3 கோடிக் கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு மற்றும் உயி ரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று உறுதியாகியிருப்பது, வைரஸ் பரவலின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 55 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து

கரோனா வைரஸுக்கு அமெ ரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு மருந்துகள் சோதனை கட்டத்தில் இருந்து வருகின்றன. எனினும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப் பட்டு வரும் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தே ஏறக்குறைய இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளது. மேலும், மனிதர்களுக்கு இதை செலுத்தி பார்த்தபோது, பெரிய அளவுக்கு பக்க விளைவுகள் இல்லாததும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், ‘கோவி ஷீல்டு’ தடுப்பு மருந்து எப்போது சந் தைக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கின்றன. இந்த மருந்தை பெரு மளவில் கொள்முதல் செய்யும் உரிமத்தை இந்தியாவின் சீரம் நிறுவனம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று கூறியதாவது:

கரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்டு’, தனது இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வருகிறது. எனவே, இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவுக்கு முதல் கட்டமாக 40 கோடி முதல் 50 கோடி ‘கோவிஷீல்டு’ டோஸ்கள் வழங்கப்பட உள்ளன.

அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், தங்களுக்குத் தேவையான மருந்து எண்ணிக்கையை இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்க ளில் எந்தப் பிரிவினருக்கு இது உடனடி தேவையோ, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.

மத்திய அரசை பொறுத்த வரை, தடுப்பு மருந்து வழங்கு வதில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியாவைச் சேர்ந்த தடுப்பு மருந்து தயாரிப்பு நிறு வனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

சீரம் நிறுவனம் கேள்வி

‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தை அதிக அளவில் கொள்முதல் செய்யவுள்ள ‘சீரம்’ நிறுவனம், இந்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா, தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில், ‘கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மக்களுக்கு விரைவில் வழங்குவோம் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மருந்தை கொள்முதல் செய்வதிலும், விநியோகிப்பதிலும் நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, அடுத்த 12 மாதங்களில் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த மருந்தை வழங்க ரூ.80 ஆயிரம் கோடிக்குமேல் தேவைப்படும். இந்த தொகை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் தற்போது கையிருப்பு உள்ளதா, எதிலும் திட்டமிடுதல் மிகவும் அவசியம்’ என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ‘கரோனா தடுப்பு மருந்தை ரூ.80 ஆயிரம் கோடிக்கு வாங்கு வதற்கு அரசு ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. கோவிஷீல்டு மருந்தை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்வதற்கும், விநி யோகிப்பதற்கு போதிய நிதி மத்திய அரசிடம் உள்ளது’ என தெரிவித்திருந்தது.

6 மாதங்களில்..

‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து இன்னும் 6 மாதங்களில் சந்தைக்கு வரும் என பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்நாட்டின் ‘டைம்ஸ்’ பத்திரிகை நேற்று வெளியிட்ட செய்தியில், ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்தான ‘கோவி ஷீல்டு’ இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிக துரிதமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும், எனவே 6 மாத காலத்துக்குள் இந்த மருந்து மக்கள் பயன்பாட் டுக்கு வந்துவிடும் என்றும் அவர் கள் கூறுகின்றனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பிரிட்டன் விஞ்ஞானிகளில் ஒருதரப்பினர், இதை திட்டவட்டமாக மறுக்கின்ற னர். கரோனா தடுப்பு மருந்து இன்று அங்கீகரிக்கப்பட்டாலும்கூட, அது சந்தைக்கு வருவதற்கு 9 மாதங்களில் இருந்து ஓராண்டு ஆகிவிடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ மருந்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனி தர்கள் மீது சோதனை செய்ய அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் இதற்கான பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x