

ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற ராணுவப் பயிற்சியின்போது நிகழ்ந்த விபத்தில் மேஜர் துருவ் யாதவ் (32) உயிரிழந்தார்.
ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மணீஷ் ஓஜா கூறும்போது, “ஜெய்சல்மீர் மாவட்டம் பொக்ரான் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வழக்க மான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் மேஜர் துருவ் யாதவ் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த துருவ் யாதவுக்கு திருமணமாகி விட்டது.