

நாடு முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற் கான மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் எம்பிபிஎஸ் படிப்பில் மனநலத்துக் காக தனி சிறப்பு பிரிவு தொடங்க, மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்வது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தற்போது எம்பிபிஎஸ் படித்த வுடன் பட்டமேற்படிப்பாக மனநல மருத்துவம் படிக்க வேண்டி யுள்ளது. அவ்வாறு இல்லாமல் மாணவர்கள் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை முடிக்கும்போதே, மனநல மருத்துவர்களாக வெளியேறுவது இதன் திட்டம் ஆகும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை எழுந்தது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேசிய மனித உரிமை ஆணை யத்தின் உறுப்பினரும் டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியுமான முருகேசன் கூறும் போது, “மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வரு கிறது. இவர்களுக்கு பொது மருத்து வம் படித்த மருத்துவர்களே சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. எனவே எம்பிபிஎஸ் படிப்பில் மன நலமருத்துவ சிறப்பு பிரிவு தொடங் கும் கோரிக்கையை அக்கூட்டத்தில் பலரும் எழுப்பினர். எனவே மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்ப இருக்கும் பரிந்துரையில் இதை சேர்ப்பது குறித்து யோசித்து வருகிறோம்” என்றார்.
எம்பிபிஎஸ் மாணவர்களில் ஒரு பிரிவினரை மனநல மருத்துவத் துக்காக பயன்படுத்த முயலும் இந்த உக்தி மிகவும் முக்கியமான தாகக் கருதப்படுகிறது. மனநலப் பிரச்சினையின் தீவிரம் கருதி சில வெளிநாடுகளும் இத் திட்டத்தை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மனநல மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக, நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் யோசனையும் எழுந்துள்ளது.
இது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தனது பரிந்துரையை வழங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.இத்துடன் அனைத்து பொதுநல மருத்துவர்களுக்கும் மனநலம் குறித்த குறுகிய கால பாடப்பிரிவுடனான பயிற்சியை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, உ.பி. ஆகிய மாநிலங் களில் மாவட்ட அளவில் மனநல மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த வும் ஒரு யோசனை அளிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக் கையை ஓரளவுக்கு, உடனடியாக கணக்கிட முடியும் என்பது அம் மாநில அரசுகளின் நம்பிக்கையாக உள்ளது.
தற்போது அரசிடம் உள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 35 லட்சம் பேர் மனநல சிகிச்சைக்காக மருத் துவமனைகளை அணுகுவதாகத் தெரிய வந்துள்ளது. உலக சுகா தார மையத்தின் ஒரு கணக்கெடுப் பின்படி, வரும் 2020-ம் ஆண்டுக் குள் இந்தியாவின் மக்கள் தொகை யில் சுமார் 20 சதவீதம் பேர் மனநல சிகிச்சை பெறுபவர்களாக இருப் பார்கள் என தெரியவந்துள்ளது.