

உ.பி. தலீத் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டுவது கொடுமையிலும் கொடுமை என்று மாயாவதி கவலை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் வன்கொடுமையில் மரணமடைந்த பரிதாபத்துக்குரிய பெண்ணின் குடும்பத்திரனை மிரட்டுவது கொடுமையிலும் கொடுமை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி ஹிந்தியில் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ஹாத்தரஸ் மேஜிஸ்ட்ரேட் மிரட்டுவதாக எழும் செய்திகள் உண்மையில் கவலை அளிப்பதாக உள்ளது.
இதற்கு எந்த வித வினையும் ஆற்றாமல் உத்தரப் பிரதேச அரசு மவுனம் காப்பது துயரத்திலும் துயரம்., கொடுமையிலும் கொடுமை.. இது மிகுந்த கவலையளிப்பதாகும்.
சிபிஐ விசாரணைக்கு அரசு ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் ஹாத்தரஸில் மேஜிஸ்ட்ரேட் தங்கியிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.. எப்படி பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும்? மக்கள் மிகவும் பயந்து போயிருக்கிறார்கள்” என்றார் மாயாவதி.
சனிக்கிழமையன்று மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.