Last Updated : 04 Oct, 2020 06:40 AM

 

Published : 04 Oct 2020 06:40 AM
Last Updated : 04 Oct 2020 06:40 AM

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடியின் மெகா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி: பாஸ்வான் கட்சி தனித்து போட்டி?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவாகி உள்ளது. லாலு மகன் தேஜஸ்வி இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டி யிடுகிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) தனித்து போட்டியிட விரும்புகிறது.

பிஹார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள் ளது. இத்தேர்தலில் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணிக் கும் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.

ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதி பங் கீடு முடிவாகி உள்ளது. தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிட்ட லாலுவின் மகன் தேஜஸ்வி, ‘‘கூட் டணி கட்சிகள் அனைத்தும் என் தலைமையில் போட்டியிடுகின் றன’’ என தெரிவித்தார். இதனால் அவரே மெகா கூட்டணியின் முதல் வர் வேட்பாளராக கருதப்படுகிறார். மொத்தம் 144 தொகுதிகளில் போட்டியிடும் ஆர்ஜேடி, காங் கிரஸுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. சிபிஎம் 4, சிபிஐ 6 மற்றும் சிபிஐ எம்எல் கட்சிக்கு 19 தொகுதிகள் கிடைத்துள்ளன. மற்ற இரு சிறிய கூட்டணி கட்சிகளான விகாஷீல் இன்ஸான் கட்சி (விஐபி) மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு தனது பங்கில் இருந்து தொகுதிகள் ஒதுக்குவதாக வும் ஆர்ஜேடி அறிவித்துள்ளது.

இதை விஐபி கட்சி ஏற்க வில்லை. அக்கட்சியின் தலைவ ரான முகேஷ் சஹானி, தமது கட்சிக் கான தொகுதிகள் அறிவிக்காமல் முதுகில் குத்தப்பட்டுள்ளதாகக் கூறி பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

ஏற்கெனவே, முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, மெகா கூட்டணியில் இருந்து வெளியேறியது. தற்போது விஐபி கட்சியும் வெளியேறி உள்ளது.

பாஸ்வான் கட்சி முடிவு?

இந்நிலையில், தேசிய ஜன நாயக கூட்டணியில் புதிய திருப் பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச் சரவையில் அங்கம் வகிக்கும் எல்ஜேபி இந்தமுறை தனித்துப் போட்டியிட விரும்புகிறது. பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 143-ல் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது.

இவை அனைத்தும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், பாஜக போட்டியிடும் தொகுதி களில் விலகி நிற்கும் எல்ஜேபி, அக்கட்சிக்கு ஆதரவான நிலையை எடுக்க உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் எல்ஜேபி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைக்கும் வகையில் புதிய கூட்டணி அமைக்க சிராக் பாஸ் வான் விரும்புகிறார். இதன்மூலம், 2025-ம் ஆண்டு பிஹார் தேர்தலில் ஆட்சி அமைப்பதன் தொடக்கமாக இந்தத் தேர்தலை கருதுகிறார். இதனால்தான் தனித்து போட்டியிட விரும்புகிறோம்’’ என்றனர்.

ஆட்சிமன்றக் குழுவை இன்று கூட்டி, கூட்டணி குறித்த முடிவை எல்ஜேபி அறிவிக்க இருந் தது. ஆனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் உடல் நிலை சற்று கவலைக்கிடமான தால், ஆட்சிமன்றக் குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக அதன் தலைவர் சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிஹாரில் தலித்துகள் 16 சதவீத மும், முஸ்லிம்கள் 17 சதவீத மும் உள்ளனர். இதில் தலித் சமூக வாக்குகள் 2 முக்கிய கூட்டணிகள் இடையே பிரிந்துள்ளன. மெகா கூட்டணியில் இருந்து தலித்களு டன் முஸ்லிம் வாக்குகளையும் பிரிக்கும் வகையில் எல்ஜேபி தனித்து போட்டியிடுவதாக கருதப்படு கிறது. இது என்டிஏவுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x