பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்; ஆர்ஜேடி கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி?- தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்; ஆர்ஜேடி கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி?- தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங் களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக் டோபர் 28-ம் தேதியும், 2-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 3-ம் கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சி கள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. மெகா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் கூடி தொகுதிப் பங்கீடு குறித்து ஏற்கெனவே ஆலோ சனை நடத்தியுள்ளனர். இதில் முடிவு ஏற்படாததால் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில் ‘‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடும். சிபிஐ எம்எல் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிடும். காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும். ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144 இடங்களில் போட்டியிடும். அதேசமயம் வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிடும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in