டிஜிட்டல் மயமாகும் ஆயுஷ் துறை; ஆயுஷ் கிரிட் 

டிஜிட்டல் மயமாகும் ஆயுஷ் துறை; ஆயுஷ் கிரிட் 
Updated on
1 min read

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சாவின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில், தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் செயல்பாடுகளுடன் இணைவதில் ஆயுஷ் துறையின் தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பாக ஆயுஷ் கிரிட் உருவாகிறது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக பல சுற்று ஆலோசனைகளை ஆயுஷ் கிரிட் குழுவும், தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கமும் ஏற்கனவே நடத்தி புரிதல்களை எட்டியுள்ளன. ஆயுஷ் துறையில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், பல்வேறு முக்கிய சுகாதார தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தவும் கடந்த இரு வருடங்கலில் ஆயுஷ் கிரிட் வெற்றிபெற்றுள்ளது.

ஒட்டுமொத்த துறைக்கும் விரிவான தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பை உருவாக்குவதற்காக 2018-இல் ஆயுஷ் கிரிட் திட்டம் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

ஒட்டுமொத்த ஆயுஷ் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் அனைத்து மட்டங்களிலும் சுகாதார சேவகளை வழங்குதல், ஆராய்ச்சி, கல்வி, சுகாதார திட்டங்கள் மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.

நாட்டின் மக்கள் உட்பட ஆயுஷ் துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் இது நன்மை அளிப்பதோடு, சுகாதாரத் துறையில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இலக்குகளை எட்டுவதற்கும் உதவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in