பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு சிவசேனா கட்சி வரவேற்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு சிவசேனா கட்சி வரவேற்பு
Updated on
1 min read

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை சிவசேனா வரவேற்றுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சிவசேனா முன்னாள் தலைவர் சதீஷ் பிரதான் உட்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. நீண்டகாலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, "இந்த வழக்கின் தீர்ப்பினை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வரவேற்கிறோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை எங்களால் மறக்க முடியாது. ஒருவேளை, அது இடிக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போது அங்கு ராமர் கோயில் கட்டுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in