

மக்கள் வசிக்கும் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தால் இருதரப்பிலும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், இதை தவிர்க்க யானைகளுக்கு ‘ரேடியோ காலர்’ பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசிடம் இருக்கும் ஒரு புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மனிதர்கள் யானைகள் முரண் பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 400 பேரும் 100 யானைகளும் உயிரிழக்க நேரிடுகிறது. அசாம், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கத் தின் தென் பகுதி ஆகிய பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட் டுள்ளன. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முழுமையாக ஓர் ஆண்டு தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து இத்துறையின் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஜிபிஎஸ் கருவிகள் மூலம் யானைகளின் நடவடிக்கை களை கண்காணிக்கவே அவற் றுக்கு ரேடியோ காலர் பொருத் தப்படுகின்றன. இதன்மூலம் யானைகளின் இடப்பெயர்ச்சி, பழக்கவழக்கம் மற்றும் பிற நடவடிக்கைகளை கண்காணித்து யானை மற்றும் மனித உயிர்களை காப்பதுடன் கோடிக்கணக்கான ரூபாய் பயிர்களையும் பாதுகாப் பது திட்டத்தின் நோக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் யானைகளுக் கான நிதி ரூ. 200 கோடியில் சுமார் பாதித்தொகை மனித இறப்புக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.
நாட்டில் யானைகள் - மனிதர்கள் இடையிலான மோதல் குறித்து ஆராய அமைச்சகத்தின் சார்பில் கடந்த மே மாதம் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. யானைகளின் இடப்பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால் அவற்றுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கலாம் என இக்குழு பரிந்துரை அளித்தது. இதன்பேரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அருகிலுள்ள நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடு களுக்கு யானைகள் இடம்பெயர் வது வழக்கமாக உள்ளது. இந் நிலையில் ரேடியோ காலர் மூலம் இதனை கண்காணித்து சம்பந்தப் பட்ட நாடுகளின் அதிகாரிகளுடன் பேசி யானைகளை மீட்கலாம் எனவும் அக்குழு யோசனை தெரி வித்துள்ளது. யானைகள் மனிதர் கள் இடையிலான மோதலுக்கு வனவளத்தை அழித்து தொழிற் சாலைகள் உருவாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களின் வளர்ச்சி ஆகிய வற்றை முக்கிய காரணங்களாக இக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் எத்தனை யானை களுக்கு கருவி பொருத்துவது என்று அமைச்சகம் இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் முதல்கட்டமாக அதிக பாதிப்பு ஏற்படும் ஒடிசா, அசாம், கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தின் தென் பகுதி ஆகிய பகுதிகளில் இதை செயல்படுத்த உள்ளனர்.
ஐ.யூ.சி.என். எனப்படும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 29,300-ல் இருந்து 30,700 வரை யானைகள் உள்ளன. நாட்டின் 26 சரணாலயங்களின் சுமார் 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் இவை உள்ளன.
நம் நாட்டில் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த 2012-ல் பன்னாட்டு நிதி அமைப்புகள் உதவியுடன் அசாம் மற்றும் தமிழகத்தின் கோவை பகுதி காடுகளில் சில யானை களுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. ஆனால் அவை சில காரணங்களால் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் முந்தைய குறை பாடுகள் இம்முறை சரிசெய்யப் பட உள்ளன. யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் நடைமுறை மியான்மர் மற்றும் இலங்கையில் நல்ல பலனை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.