கில்ஜித் - பல்திஸ்தானுக்கு தேர்தல் அறிவிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

கில்ஜித் - பல்திஸ்தானுக்கு தேர்தல் அறிவிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த கில்ஜித்-பல்திஸ்தான் 1947 முதல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கில்ஜித்-பல்திஸ்தான் சட்டப் பேரவைக்கான தேர்தல் நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தேர்தலைத் தொடர்ந்து அந்த பிராந்தியத்தை தனது 5-வது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கில்ஜித்-பல்திஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 15-ல்தேர்தல் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

1947-ம் ஆண்டு இணைப்பின் அடிப்படையில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகள் உட்பட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒட்டுமொத்த பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதிக்கு பாகிஸ்தான் எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது. கில்ஜித்-பல்திஸ்தானுக்கு தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதியில் செய்யஉள்ள மாற்றங்களை இந்திய அரசு முற்றிலும் நிராகரிக்கிறது.

காஷ்மீர் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள தையும் கடந்த 70 ஆண்டுகளாக அங்குள்ள மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மறைத்துவிட முடியாது.

அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் உடனடியாக வெளி யேற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in