Published : 30 Sep 2020 07:28 AM
Last Updated : 30 Sep 2020 07:28 AM

டிராக்டரை எரித்து விவசாயிகளை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

விவசாயிகள் புனிதமாக நினைக்கும் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளை எரித்து, அவர்களை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நதிக்கு புத்துயிரூட்டும் ஒருங்கிணைந்த 6 திட்டங்களை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயக் கருவிகளை விவசாயிகள் புனிதமாக நினைக்கின்றனர். அவற்றை வழிபடுகின்றனர். அப்படிப்பட்ட டிராக் டர் உள்ளிட்ட கருவிகளையும், விளை பொருட்களையும் எரித்து எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளை அவமானப்படுத்தி வருகின்றனர்.

தற்போது புதிய வேளாண் சட்டத்தை எதிர்ப்பவர்கள், தங்கள் ஆட்சியின்போது குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) அமல்படுத்த ஆதரவாக பேசினார்கள். ஆனால், அதை செய்ய வில்லை. ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிஷன் அளித்த பரிந்துரைகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமல்படுத்தியது. குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் விவசாயிகளை தவறான பாதைக்கு எதிர்க்கட்சிகள் அழைத்துச் செல்கின்றன.

வேளாண் விளைபொருட்களை விவ சாயிகள், அவர்கள் விரும்பும் இடத்தில் எங்கு வேண்டுமானாலும் விற்க புதிய சட்டத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள் ளது. இதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன்மூலம் கறுப்புப் பணம் சம்பாதிக்கும் அவர்களுடைய கதவு அடைக்கப்பட்டுவிட்டது. அதேநேரத் தில் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து அப்படியே இருக்கும். எனவே, புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து எந்த பயமும் அவர்களுக்கு வேண்டாம்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் விஷயத்தில், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் தடபுடலாக நடவடிக்கை எடுத்தனர். அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில், கங்கை நதியை தூய்மைப்படுத்த அவர்களிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை. பொதுமக்களின் பங்களிப்பையும் அவர்கள் பெற தவறிவிட்டனர். நாங் கள் புதிய சிந்தனையுடன், புதிய அணுகுமுறையுடன் கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, புத்துயிரூட்ட திட்டம் வகுத்தோம். கங்கை நதியை தூய்மைப்படுத்துவது மட்டும் இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல. விரிவான, பரந்துபட்ட வகையில் கங்கை நதியை பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சுகா தாரம் தொடர்பான பல சீர்திருத்தங்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டன. இவற் றின் மூலம் தொழிலாளர்கள், இளைஞர் கள், பெண்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பலனடைவர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்ப்பதையே வழக்கமாக கொண் டுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x