ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 56 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 56 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

பிஹாரில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும், நாடு முழுவதும் உள்ள 56 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த சட்டப்பேரவை தொகுதிகள் சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.

உள்ளூர் திருவிழாக்கள், வானிலை நிலவரங்கள், பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து மற்றும் பெருந்தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான அட்டவணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தல் நவம்பர் 3-ம் தேதி 54 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மற்றும் நவம்பர் 7-ம் தேதி 2 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகள் உள்ள மாவட்டங்களில் தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடைமுறைகளின் போது கரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in