கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சட்டச்சேவை அதிகாரிகள் அடையாளப்படுத்தும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்களது அடையாள அட்டைகளைக் கேட்காமல் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எத்தனை பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை 4 வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் அஜய் ரஸ்டோகி ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது கரோனா காலத்தில் இவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி பிற்பாடு பரிசீலிக்கலாம் என்று கூறியது.

எனவே மாநிலங்கள் ரேஷன் பொருட்களை பாலியல் தொழிலாளர்களுக்கு அளித்து அதன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், 4 வாரங்களுக்குப் பிற்?அகு மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் தொழிலாளர்களுக்கு எப்படி ரேஷன் அட்டைகள் அளிக்கப்படுகிறது என்ற விவரங்களையும் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறும்போது, உதவி வழங்க மாநிலங்கள் முன் வந்துள்ளதை நாங்கள் அறிவோம், ஆனால் பிரச்சினை என்னவெனில் பாலியல் தொழிலாளர்களிடத்தில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் எந்த ஒரு ஆவணமும் இல்லை. எனவே அனைவருக்கும் ரேஷன் அளித்தாக வேண்டும். மாநிலங்கள் இதை எப்படி அமல்படுத்துவது என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நம்பிக்கை அறிவுரையாளராக இந்த வழக்கில் செயல்படும் வழக்கறிஞர் பிஜுஷ் குமார் ராய், பாலியல் தொழிலாளர்க்ளுக்கு வங்கிக் கணக்குகளும் தொடங்க அனுமதிக்க வேண்டும், அடையாள ஆவணங்களை வற்புறுத்தக் கூடாது.

கடந்த மாதம் இந்தப் பிரச்சனையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது, கரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ரேஷன் மற்றும் நேரடி ரொக்கமளிப்பும் செய்ய வலியுறுத்தியது.

என்.ஜி.ஓ, ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆந்த குரோவர், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வின் படி சுமார் 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 96% கரோனா காலத்தில் தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளனர் என்றார்.

உச்ச நீதிமன்ற இன்னொரு அறிவுரையாளரான மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷனும், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை கொடுக்கப்பட வேண்டும் அவர்களிடத்தில் அடையாள ஆவணங்கள் எதையும் கேட்கக் கூடாது என்றா.

தர்பா மைலா சமன்வய கமிட்டி என்ற என்.ஜி.ஓ அமைப்பு மேற்கொண்ட மனுவின் மீதான விசாரணையில்தான் பாலியல் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்கள் அலசப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in