கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணியை அனுமதிக்க மறுப்பு: இரட்டைக் குழந்தைகள் இறந்த பரிதாபம்

விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா.
விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா.
Updated on
1 min read

கேரளாவில் கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைகல் அனுமதிக்க மறுத்ததால் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.

மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷெரீப், கர்ப்பிணியான இவரது மனைவி கரோனா பாதிப்பினால் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து கடந்த 15ம் தேதியே வீடு திரும்பினார்.

இந்நிலையில் கர்ப்பிணியான இவருக்கு கர்ப்பகாலம் முற்ற பிரசவ வலி ஏற்பட்டது, இவரை மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் படாதபாடுபட்டனர். மஞ்சேரி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்கானதால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரு தனியார் மருத்துவமனை அந்த பெண்ணுக்கு கரோனா அச்சத்தினால் அனுமதி மறுத்தது. கொரோனா இல்லை என்ற மஞ்சேரி மருத்துவமனை சான்றிதழையும் ஏற்கவில்லை.

கிட்டத்தட்ட 14 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை மருத்துவமனையாக கர்ப்பிணி அலைந்ததில் அவரது இரட்டைக் குழந்தைகள் இறந்து போயின.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்த, சுகாதார அமைச்சர் ஷைலஜா விசாரணைக்கு உத்தரவிட்டு கூறும்போது, “கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in