போலீஸாரின் கண்காணிப்பு திட்டம் தெரியாமல் இந்திராணி, சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷ்யாம் ‘லாக் அப்’ அறையில் ஒருவருக்கு ஒருவர் சண்டை

போலீஸாரின் கண்காணிப்பு திட்டம் தெரியாமல் இந்திராணி, சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷ்யாம் ‘லாக் அப்’ அறையில் ஒருவருக்கு ஒருவர் சண்டை
Updated on
2 min read

போலீஸார் ரகசியமாக கண்காணிப்பது தெரியாமல், லாக் அப் அறையில் இந்திராணி - சஞ்சீவ் கண்ணா - டிரைவர் ஷ்யாம் ஆகிய மூவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுள்ளனர். அதன்மூலம் சில தகவல்களை போலீஸார் திரட்டி உள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில், தாய் இந்திராணி, இவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷ்யாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷீனா கொலை குறித்து விசாரணை நடத்தியபோது, இந்திராணி எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார். இதனால் போலீஸார் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.

மும்பை போலீஸ் ஆணையர் ராகேஷ் மரியா மற்றும் இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) தேவன் பார்த்தி ஆகியோரின் உத்தரவுப்படி, இந்திராணி, சஞ்சீவ் கண்ணா, ஷ்யாம் மூவரை யும் கர் போலீஸ் நிலைய லாக் அப் அறையில் கடந்த செவ்வாய்க் கிழமை வைத்துள்ளனர். அதன்பின் போலீஸார் வெளியில் சென்றுள்ளனர்.

அதன்பின் அறையில் சில நிமிடங்கள் அமைதி நிலவி உள்ளது. மூவரும் எதுவும் பேசா மல் இருந்துள்ளனர்.

திடீரென இந்திராணி கோபம் அடைந்து, ‘ஏன் என்னை மாட்டி விட்டீர்கள்’ என்று சஞ்சீவ் கண்ணாவிடம் கேட் டுள்ளார். அதன்பின் அவர்களுக் குள் நடந்த உரையாடல் வருமாறு:

இந்திராணி:

ஏன் இப்படி செய் தீர்கள். என் பெயரை ஏன் இழுத் தீர்கள். உங்களால்தான் நான் இங்கு இருக்கிறேன். இந்தப் பிரச்சினையில் என்னை இழுத்து விட்டுவிட்டீர்கள். நான் உங்களை நம்பினேன் (கதறி அழுதுள்ளார்).

சஞ்சீவ்:

(தலை கவிழ்ந்து சிறிது நேரம் அமைதியாக இருந்தார்)

இந்திராணி:

(ஆவேசம் அடைந்து) இன்னும் எத்தனை விஷயத்தை என்னிடம் இருந்து மறைத்துள்ளீர்கள். போலீஸில் நீங்கள் கூறியுள்ள பாதி செய்தி அதிர்ச்சி யாக இருக்கின்றன. எனக்கு அவற்றை பற்றி எதுவும் தெரியாது. எப்படி நீங்கள் எல்லாவற்றையும் என்னிடம் இருந்து மறைத்தீர்கள்? (அப்போது போலீஸார் ரகசிய மாக ஒட்டுக்கேட்கலாம் என்று சந்தேகப்பட்டு இந்திராணியின் கைகளை பிடித்து சஞ்சீவ் அமைதிப்படுத்த முயன்றார்.)

சஞ்சீவ்:

என்னை மன்னித்து விடு. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக இரு. (உடனே சஞ்சீவ் கண்ணாவின் கையை உதறிவிட்டு, டிரைவர் ஷ்யாம் ராய் பக்கம் திரும்பி சத்தமாக திட்டுகிறார்)

இந்திராணி:

இதெல்லாம் உன் னுடைய தவறு. போலீஸில் உன்னை யார் உளற சொன்னது. வாயை மூடிக் கொண்டு இருக்க முடியவில்லையா? உனக்கு பணம் வேண்டுமா? கேட்டிருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்திருப்பேனே.

உனக்கு பிரச்சினை என்றால் வழக்கறிஞரை வைத்து உனக்கு உதவியிருப்பேனே. நீ மட்டும் வாய் திறக்காமல் இருந்திருந்தால், இதெல்லாம் நடந்திருக்காது. நீ யார் பக்கம் இருக்கிறாய்.

உன்னால்தான் இப்போது எனக்கு இப்படி ஆகிவிட்டது. அவரைப் பற்றி (ஷீனா கொலை வழக்கில் தேடப் படும் 4-வது குற்றவாளி) ஏன் என் னிடம் சொல்லவில்லை. அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீ ஏன் அவரிடம் உதவி கேட்டாய். நீதான் எங்களைப் பிரச்சினையில் சிக்க வைத்து விட்டாய். (பின்னர் சஞ்சீவ் கண்ணாவைப் பார்த்து மேலும் கோபமாக பேசியுள்ளார்.)

நீங்கள் 2 பேரும் இப்போது கூட்டாளியாகி விட்டீர்கள். எனக்கு அது நன்றாக தெரியும். ஆனால், எதையும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் 2 பேரும் சேர்ந்து என்னை சிக்க வைத்துள்ளீர்கள்.

என்னுடைய திட்டம்தான் என்று எப்படி நீங்கள் போலீஸில் சொன்னீர்கள்? கொலை செய்யும் நோக்கில் ஷீனாவை அழைத்தது, கொலை செய்தது, உடலை மறைக்க பெரிய சூட்கேஸ், பெட்ரோல் வாங்கியது, பின்னர் உடலை எரித்து புதைத்தது எல்லாம் நீங்கள். ஆனால், எல்லா குற்றங்களையும் என் மீது சுமத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். நீங்கள் இருவரும்தான் இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பு. இதற்கான பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மட்டும் தனியாக பொறுப்பாக மாட்டேன்.

இவ்வாறு லாக் அப் அறையில் இந்திராணி ஆவேசமாக பேசியுள்ளார். இந்த உரையாடல் அனைத்தையும் போலீஸார் கண்காணித்து பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in