

இன்றைய அரசு பல புள்ளி விவரங்களை மக்களிடமிருந்து மறைத்து வருகிறது, தகவலுரிமைச் சட்டத்தையே சீரழிக்கிறது இன்றைய பாஜகவின் ஆட்சி, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து செய்து வருகிறது நடப்பு மத்திய ஆட்சி என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய பாஜக ஆட்சி ‘தகலுரிமைச் சட்டத்தை சீரழித்து உண்மையை மறைக்கிறது’ என்றார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
இன்று உலக தகவலுரிமை நாளையொட்டி அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:
எந்த ஒரு அதிர்வுடன் கூடிய ஜனநாயத்தையும் தாக்குவது தகவல்களை மறைப்பதாகும். மத்திய ஆட்சி ஆர்டிஐ சட்டத்தை மறுத்து உண்மையை மறைத்து வருகிறது.
இந்த விஷயத்தில் மேற்கு வங்க அரசும் மத்திய அரசின் வழியைப் பின்பற்றி உண்மையை மறைக்கிறது. கரோனா நிலவரம் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கோருகிறேன், சாமானிய மனிதன் தகவல் புதைப்பினால் பாதிக்கப்படுகிறான்.
இந்த வரலாற்று நாளில் உண்மையை வெளியிடுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த தகவலுரிமை உலக தினத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஆர்டிஐ சட்டம் என்ற சகாப்தமான சட்டத்தை அமல் படுத்தியது.
இன்றைய தினத்தின் சாராம்சத்துக்கு ஆர்டிஐ சட்டம் போன்ற ஒரு அர்ப்பணிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது, என்றார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
தகவல் சுதந்திரச் சட்டம், 2002-ஐ மாற்றி மன்மோகன் சிங் அரசு 2005-ல் தகவலுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.