Last Updated : 26 Sep, 2020 04:41 PM

 

Published : 26 Sep 2020 04:41 PM
Last Updated : 26 Sep 2020 04:41 PM

மறைந்த  ‘லெஜண்ட்’ எஸ்பிபி ஒரு பாடும் நிலாதான்: சோனியா காந்தி புகழாஞ்சலி

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இன்று 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எஸ்பிபியின் மகன் சரணுக்கு எழுதிய கடிதத்தில், “எஸ்பி. பாலசுப்ரமண்யத்தின் மறைவினால் துயரமுற்றேன். 6 வாரங்கள் கொடூரமான கரோனா வைரஸுடன் போராடினார், கடைசியில் அவர் உயிர் பிரிந்தது.

இந்தியாவின் வளமையான இசை மற்ரும் மொழிப் பண்பாட்டின் ஒரு பிரகாசிக்கும் குறியீடு பாலசுப்ரமண்யம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையளம் இந்தி மொழிகளில் ஒரே மாதிரியான இனிமையுடனும் உணர்ச்சி ததும்பலுடனும் அவர் பாடல்களைப் பாடினார்.

நாடு முழுதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன் இனிமையான குரலால் மகிழ்வித்தார். கலை, பண்பாட்டு உலகம் அவரது இழப்பினால் இருண்டு கிடக்கிறது.

ஆம் ! அவர் பாடும் நிலாதான், நாட்டின் மீது சிறப்பான ஒளிவீசிய நிலா. ” என்று தன் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x