Last Updated : 26 Sep, 2020 10:37 AM

 

Published : 26 Sep 2020 10:37 AM
Last Updated : 26 Sep 2020 10:37 AM

மன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

சனிக்கிழமையான இன்று தனது 88வது பிறந்த தினம் காணும் முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2004-2014-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இன்று அவருக்கு 88 வயது.

1991-96-ல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார் மன்மோகன் சிங். 2008-ம் ஆண்டு உலக அளவில் பொருளாதாரம் பின்னடைவைக் கண்ட போது இந்தியா அதில் பெரிய அளவுக்கு பாதிப்படையாமல் சிலபல திட்டங்களை மேற்கொண்டார் என்று பொருளாதார வல்லுநர்களால் பாராட்டப்படுபவர் மன்மோகன் சிங்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் மன்மோகன்சிங்ஜி-க்கு பிறந்த தின வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளையும் ஆரோக்கிய வாழ்வையும் உங்களுக்கு அளிக்க கடவுளிடம் பிரார்த்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x