

முழு உலகமும், ராணுவ ஆதிக்கத்திற்கு விண்வெளியை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது மிகப் பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பொறுத்தவரை, விண்வெளி தொழில்நுட்பம் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ற தளம் என்று டாக்டர் சாராபாய் நினைத்தார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
விண்வெளி மற்றும் அணுசக்தி துறை காணொலி காட்சி மூலம் இன்று (செப்டம்பர் 25, 2020) ஏற்பாடு செய்த டாக்டர் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
டாக்டர் விக்ரம் சாராபாயை நினைவு கூறிய குடியரசுத் தலைவர், சிலரது வாழ்க்கையும், செயல்களும் நமது உணர்வுகளை தூண்டுகின்றன என கூறினார். டாக்டர் விக்ரம் சாராபாய், ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’, தனித்துவமான மனிதர், அவரது அடக்கம், அவரது பெரிய சாதனைகளை மறைத்தது.
உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞானி, கொள்கை வகுப்பாளர் மற்றும் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் - அவர் மிகவும் அரிதான கலவை. தனது முடிவு நெருங்கிறது என்பதை அவர் அறிந்தது போல், குறுகிய காலத்திலேயே அவர் அனைத்தையும் சாதித்தார். அவரது வாழ்க்கை துரஅதிர்ஷ்டமாக மிக விரைவாகவே முடிந்து விட்டது.
அவர் நீண்ட காலம் நாட்டுக்கு சேவையாற்றியிருந்திருந்தால், இந்தியாவின் விண்வெளித் துறை எங்கோ சென்றிருக்கும் என நாம் ஆச்சரியப்படுகிறோம்.
ஒரு விஞ்ஞானியாக, டாக்டர் சாராபாய் ஒருபோதும் கண்காணித்ததை குறிப்பிடுவதில் மட்டும் திருப்தியடையவில்லை என குடியரசுத் தலைவர் கூறினார். கிரக இடைவெளியின் தன்மையை நன்கு புரிந்துகொள்வதற்கான சோதனை தரவுகளின் தாக்கங்களை அவர் எப்போதும் கவனித்தார். 1947-1971ம் ஆண்டுகளுக்கு இடையே, தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் இதழ்களில் அவர் 85 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார்.
டாக்டர் சாராபாய், ஒரு சிறந்த நடைமுறைவாதி என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய விண்வெளி திட்டத்தை அவர் , மற்ற நாடுகளை போல் வழிநடத்திச் செல்ல வில்லை. அதிகரிக்கும் நடைமுறைக்கு பதிலாக, அவர் பாய்ச்சலை விரும்பினார். இந்தியாவை போன்ற வளரும் நாடுகள், செயற்கைகோள் தகவல் தொடர்பில் நேரடியாக இறங்க வேண்டும் என அவர் நினைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கு, செயற்கைகோளின் பயனை நிருபிக்க அவர் விரும்பினார். கோவிட்-19 தொற்றால், பள்ளி கல்வி தடைபட்டபோது, தொலைதூர கல்வி தொடர்வதன் மூலம் அவரது கனவு நனவானதை நாம் இன்று உணர்கிறோம்.
டாக்டர் சாராபாயின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டங்களின் போது, விண்வெளி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு மத்திய அரசு தகுந்த புகழஞ்சலியை செலுத்தியுள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார்.
மனிதனின் மற்றும் சமூகத்தின் உண்மையான பிரச்னைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நாம் யாருக்கும் இரண்டாவதாக இருக்க கூடாது என டாக்டர் சாராபாய் கூறினார். அதிகமான தற்சார்பு திட்டங்களுக்கு இந்தியா முயற்சிக்கும்போது, டாக்டர் விக்ரம் சாராபாயின் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம் என குடியரசுத் தலைவர் கூறினார்.