வரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹர்ஷ வர்த்தன் பாராட்டு

வரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹர்ஷ வர்த்தன் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸின் 65-வது நிறுவன விழாவை டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸின் 65-வது நிறுவன விழாவைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எய்ம்ஸின் இளநிலை படிப்புக்கான பாடங்கள் தொடங்கப்பட்டதை இந்த தினம் குறிக்கிறது. 1956-ஆம் வருடத்தில் எம்பிபிஎஸ் முதல் வருடத்தின் வகுப்புகள் எய்ம்ஸில் தொடங்கின.

மனித வளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மருத்துவ நிறுவனங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக எய்ம்ஸில் பணிபுரிபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், கோவிட்-19-க்கு எதிரான நாட்டின் போரில் சிறந்த பங்களித்தமைக்காக எய்ம்ஸுக்கு நன்றி கூறினார்.

"இந்த வரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனையில் எய்ம்ஸ் ஆற்றிய பங்கு அளப்பரியது," என்று அவர் கூறினார். 65-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக கோவிட் காலகட்டத்தில் எய்ம்ஸ் என்னும் கண்காட்சி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in