Published : 25 Sep 2020 02:24 PM
Last Updated : 25 Sep 2020 02:24 PM

‘‘சில்லரை அரசியல் லாபத்திற்காக விவசாயிகளை தூண்டி விடாதீர்கள்’’- எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் கண்டனம்

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைப் பற்றிய தவறான தகவல்கள் சுயநல நோக்கங்களுக்காக பரப்பப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

சில்லரை அரசியல் லாபங்களுக்காக விவசாயிகளை சிலர் தூண்டி விடுவதாக அவர் மேலும் கூறினார்.

அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்களில் இல்லாத சரத்துக்களை எல்லாம் இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மேலும் அவர் தெரிவித்தார்.

உதாரணத்துக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் இனிமேல் நிறுத்தப்படும் என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அவர் கூறினார். இதைப்பற்றி எந்த ஒரு குறிப்பும் வேளாண் சட்டங்களில் இல்லை என்றும், இதன் பொருள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்பதே ஆகும் என்றும் அவர் கூறினார்.

வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதற்கான காரணம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கவே என்றும், இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும், பெரிய நிறுவனங்களுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x