

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி மறைந்ததற்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்தது.
சுரேஷ் சி அங்காடி நினைவாக மத்திய அமைச்சரவை 2 நிமிடங்கள் மவுனம் அனுசரித்தது.மத்திய அமைச்சரவை இன்று கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது:
‘‘ரயில்வே இணையமைச்சர் திரு.சுரேஷ் அங்காடி புதுதில்லியில் செப்டம்பர் 23-ம் தேதி மறைந்ததற்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது மறைவால், நாடு புகழ்பெற்ற தலைவரையும், கல்வியாளரையும், இழந்துவிட்டது. ஒரு புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான நிர்வாகியை நாடு இழந்துவிட்டது.
திரு.சுரேஷ் அங்காடி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். பெலகாவியில் சட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1996ம் ஆண்டு பெலகாவி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனார். கடந்த 2004ம் ஆண்டு பெலகாவி மாவட்டத்திலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2009, 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டு தேர்வு செய்யப்பட்டார். பல துறைகளின் நாடாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், ரயில்வே இணையமைச்சர் ஆனார்.
அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் சார்பில் மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறது.