ஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்து: முற்றிலுமே ஏற்க முடியாதது; இந்தியா பதில்

ஐநா சிறப்புப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி.
ஐநா சிறப்புப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி.
Updated on
1 min read

ஐ.நா. பொதுச்சபையில் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் பற்றி தெரிவித்த கருத்துகளை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

துருக்கி அதிபர் பிறநாட்டு இறையாண்மையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய கொள்கைகளை இன்னும் ஆழமாக துருக்கி பரிசீலிக்கட்டும் என்று துருக்கி அதிபருக்கு இந்தியா பதில் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான ஐநாவின் நிரந்தரத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “பிறநாட்டு இறையாண்மையை துருக்கி மதிக்கக் கற்றுக்கொள்வது நல்லது. மேலும் தங்கள் கொள்கைகளை ஆழமாகப் பரிசீலிக்கட்டும்.

துருக்கி அதிபரின் கருத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

எர்டோகன் அப்போது பேசியபோது, “தெற்காசிய அமைதியில் ஜம்மு காஷ்மீர் விவகாரமும் உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பிறகு அங்கு இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.

உரையாடல் மூலம் ஐநா தீர்மானங்களுக்கு உட்பட்டு, காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்க்க உதவத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

துருக்கி அதிபர் பாகிஸ்தானுக்கு நெருக்கமானவர். கடந்த ஆண்டு இந்தப் பிரச்சினையை ஐநா பொதுச்சபையில் எழுப்பினார். ஆனால், இந்தியா தொடர்ந்து 3-ம் நாட்டின் தலையீட்டை மறுத்து வந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் தொடர்பான எந்தப் பிரச்சினைகளையும் இருதரப்பு பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in