பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதையொட்டி, ஆகம விதிக ளின்படி கோயில் ஆழ்வார் திரு மஞ்சன நிகழ்ச்சிகள் நேற்று நடை பெற்றன.

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்தை வாசனை திரவியங் களால் சுத்தப்படுத்தும் ‘கோயில் ஆழ் வார் திருமஞ்சனம்’ நிகழ்ச்சி நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

தெலுங்கு வருட பிறப்பான உகாதி, ஆனிவரை ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம் மோற்சவ விழா போன்ற முக்கிய விஷேச நாட்கள் தொடங்குவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை மூலவர் சன்னதி உட்பட கோயில் வளாகம் முழுவதும், பச்சை கற்பூரம், சந்தனம், மஞ்சள், குங்கும பூ, பன்னீர் போன்றவற்றால் சுத்தப்படுத்துவது ஐதீகம். வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குவதால், நேற்று வழக்கப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. மூல வருக்கு பிளாஸ்டிக் ஆடை உடுத்திய பின்னர் மூலவர் சன்னதி முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் கோயில் சுவர்கள், தங்க கொடி மரம், தங்க விமான கோபுரம் மற்றும் கோயிலுக்குள் உள்ள மற்ற சன்னதிகள், பூஜை பொருட் கள் போன்ற அனைத்தும் சுத்தப் படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், அறங் காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி, நேற்று நடை பெற இருந்த அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய் யப்பட்டது. காலை 11 மணிக்கு பின்னர் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in