மாஞ்சிக்கு ரூ.63 லட்சம் சொத்து

மாஞ்சிக்கு ரூ.63 லட்சம் சொத்து
Updated on
1 min read

பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.63 லட்சம் என்று அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பிஹாரில் பாஜக தலைமையி லான கூட்டணியில் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூர், கயா மாவட்டத்தின் இமான்கஞ்ச் ஆகிய 2 தொகுதிகளில் மாஞ்சி போட்டி யிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்தும்பூர் தொகுதிக்கான வேட்புமனுவை அவர் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் மாஞ்சி தனக்கு ரூ.13 லட்சத்தில் வீடு, 2 கார்கள், ரூ.37 லட்சம் மதிப்பில் 5 ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த நிலத்தை மாஞ்சி வாங்கியுள்ளார்.

இந்நிலையில் மாஞ்சி தனது வயது மற்றும் சொத்து விவரங்கள் குறித்து மாறுபட்ட தகவல்களை அளித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in