லடாக்கில் மேலும் 3 மலை உச்சியை கைப்பற்றியது இந்திய ராணுவம்: சீனா கடும் அதிர்ச்சி

லடாக்கில் மேலும் 3 மலை உச்சியை கைப்பற்றியது இந்திய ராணுவம்: சீனா கடும் அதிர்ச்சி
Updated on
1 min read

இமயமலையின் லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக இரு நாடுகளிடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இதைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றன. இதன் விளைவாக லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இருந்தபோதிலும், சில பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத் துருப்புகளை விலக்கிக்கொள்ள சீனாமறுக்கிறது. எனவே, அந்தப் பகுதிகளில் இந்தியாவும் தனது ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. ஆனால் அவர்களை இந்திய ராணுவத்தினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க எண்ணிய இந்திய ராணுவ வீரர்கள், அங்கிருந்த 3 மலை உச்சிகளை கைப்பற்றினர். இந்த மலை முகடுகள் முன்னதாக சீனாவின் ஆளுகையின்கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மஹர், குருங் மொக்பாரி ஆகிய 3 புதிய மலை உச்சிகளையும் இந்திய ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கிழக்கு எல்லை பாதுகாப்பை உறுதி செய்யவும், சீன அத்துமீறலை தடுக்கவும் இந்த மலை உச்சிகள் இந்திய ராணுவத்துக்கு பேருதவியாக இருக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையால்சீனா கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in