

சத்தீஸ்கரில் நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஆளில்லா உளவு விமானங்கள் மற்றும் போர் தளவாடங்களை தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (என்டிஆர்ஓ) அனுப்பியுள்ளது. இந்நிலையில் இவற்றின் புகைப் படங்களை வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் துணை ராணுவப் படை யினர் பகிர்ந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து துணை ராணுவப் படைகளுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பி யுள்ள உத்தரவில், “நாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் விளை விக்கக்கூடிய ரகசிய தகவல் களை, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள் வது பொறுப்பற்ற செயலாகும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திட்டங்கள் குறித்த தகவல்களை பாதுகாப்பு படையினர் தங்கள் குழுவுடனோ அல்லது ஊடகங்களுடனோ பகிர்ந்துகொள்ளக் கூடாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் இதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.