

பிஹாரில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) நேற்று 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எச்ஏஎம் இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 20 தொகுதிகளை பாஜக ஒதுக்கியது.
இதில் முதல்கட்டமாக 13 தொகுதி களுக்கான வேட்பாளர்களை எச்ஏஎம், சில நாட்களுக்கு முன் அறி வித்தது. இதில் மாஞ்சி, மக்தும்பூர் தொகுதியிலும் அவரது மகன் சந்தோஷ்குமார் சுமன், அவுரங்கா பாத் மாவட்டம், குதும்பா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.