தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதில் தடங்கல்கள் நீக்கப்பட வேண்டும்: ரமேஷ் பொக்ரியால்  திட்டவட்டம்

தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதில் தடங்கல்கள் நீக்கப்பட வேண்டும்: ரமேஷ் பொக்ரியால்  திட்டவட்டம்
Updated on
1 min read

தேசிய கல்வி கொள்கை பற்றிய பார்வையாளர்கள் மாநாடு அதை வெற்றிகரமாக செயல் படுத்தும் உறுதியோடு நிறைவடைந்தது

மெய்நிகர் முறையில் இன்று நடைபெற்ற தேசிய கல்வி கொள்கை பற்றிய பார்வையாளர்கள் மாநாடு, அதை வெற்றிகரமாக செயல் படுத்தும் உறுதியோடு நிறைவடைந்தது.

`உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துதல்' என்ற தலைப்பில் மாநாட்டின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்த நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் மூலம், சமநிலையிலான, துடிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியப் பாதையை இது வகுக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடக்க உரையாற்றினார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வதில் உள்ள எல்லா தடங்கல்களும் நீக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தன் உரையில் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in