Published : 18 Sep 2020 09:27 PM
Last Updated : 18 Sep 2020 09:27 PM

கடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி

காய்கறிகள் மற்றும் பூக்களின் விளைச்சல் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளதாக நாடளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர
சிங் தோமர் கூறியதாவது:

காய்கறிகள் மற்றும் பூக்களின் விளைச்சல் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விளைச்சல் 2016-17-இல் 178172 ஆயிரம் டன்களாகவும், 2017-18-இல் 184041 ஆயிரம் டன்களாகவும், 2018-19-இல் 183170 ஆயிரம் டன்களாகவும் இருந்த நிலையில், 2019- 2020-க்கான மூன்றாவது உத்தேச மதிப்பீட்டின் படி 189464 ஆயிரம் டன்களாக இருக்கிறது.

பூக்களின் விளைச்சல் 2016-17-இல் 2392 ஆயிரம் டன்களாகவும், 2017-18- இல் 2631ஆயிரம் டன்களாகவும், 2018-19-இல் 2910 ஆயிரம் டன்களாகவும் இருந்த நிலையில், 2019-2020-க்கான மூன்றாவது உத்தேச மதிப்பீட்டின் படி 2994 ஆயிரம் டன்களாக இருக்கிறது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் சில மாவட்டங்களில் 2019-20-இல் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடந்தது. 2020-21-இல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பிஹார், ஹரியானா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்
நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே ரூ 132.54 கோடியும், ரூ 18.74 கோடியும் 2019-20-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கின.

2020 மே 15 அன்று நிதி அமைச்சர் ரூ 1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதியை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், ஆரம்ப வேளாண் கடன் நிறுவனங்கள், சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரூ 1 லட்சம் கோடி கடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும்.

பழங்களின் செயற்கை முறையில் பழுக்க வைத்தல் தொடர்பான வழிகாட்டு அறிக்கையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் வெளியிட்டுள்ளது. கால்சியம் கார்பைடை பயன்படுத்தி பழங்களின் செயற்கை முறையில் பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கு நாடு முழுவதும் 264 ஆய்வகங்கள் உள்ளன. பயிர் பன்முகப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளின் பங்களிப்போடு ஒரு விரிவான ஆராய்ச்சியை இந்திய வேளாண் அமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.

பல்வேறு வேளாண் அமைப்புகளுக்கான பயிர் அமைப்புகளைக் கண்டறிதல் குறித்த ஆய்வு 20 மாநிலங்களில் உள்ள 31 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களில் கீழ் அரசு ஆதரவு வழங்கி வருகிறது. பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா, வட கிழக்கு பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்பு
சங்கிலி வளர்ச்சி இயக்கம், மூலதன முதலீட்டு மானியத் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இதில் சிலவாகும்.

வேளாண் சந்தைப்படுத்துதல் மாநிலப் பட்டியலில் வருகிறது. மத்திய அரசு இதில் தனது ஆதரவை அளிக்கிறது. தேசிய வேளாண் சந்தை என்னும் இணையம் சார்ந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி இருக்கிறது.
2020 ஆகஸ்ட் 31 வரை, மொத்தம் 1.67 கோடி விவசாயிகள், 1.44 லட்சம் வியாபாரிகள், 83,958 முகவர்கள் மற்றும் 1722 விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இத்தளத்தின் மூலம் மொத்தம் ரூ.1,04,313 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரூ 1 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தேனீ வளர்ப்புக்காக ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இந்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு செயல்படுகிறது.

இதன் ஆராய்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து வலிமைப்படுத்தப்பட்டு, மறு சீரமைக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களில் 51 புதிய கிரிஷி விக்யான் கேந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பி எம்-கிசான் நிதி தளத்தில் 2020 செப்டம்பர் 17 வரை 11,07,62,287 பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளோரின் எண்ணிக்கை 4863193 ஆகும்.

பிரதமர் பசல் பீமா யோஜனா என்னும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

2020 செப்டம்பர் 18 நிலவரப்படி, 1113.63 லட்சம் ஹெக்டேர்களில் கரிப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் 1053.52 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும் பொது இது 5.71 சதவீதம் அதிகமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x