Last Updated : 18 Sep, 2020 08:07 PM

 

Published : 18 Sep 2020 08:07 PM
Last Updated : 18 Sep 2020 08:07 PM

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரோனா பரவலுக்கு முன்பான நிலுவையை அளிக்க நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்

விஜயகுமார் எம்.பி .

புதுடெல்லி

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2018-19, 2019-20 நிலுவையை அளிக்க மத்திய அரசிடம் நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியது. இதன் மீதான மசோதாவை தம் கட்சி ஆதரிப்பதாகக் கூறி இன்று மாநிலங்களவையில் பேசிய விஜயகுமார் எம்.பி. இதை தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதி மசோதாவின் விவாதத்தில் அதிமுகவின் விஜயகுமார் பேசியதாவது: கரோனா பரவல் காலத்தில் நான் மேம்பாட்டு நிதியில் இருந்து எனது மாவட்ட அரசு மருத்துவமனைக்காக ரூ.106 லட்சம் அளித்தேன்.

இதில், வெண்டிலேட்டர், மானிட்டர் உள்ளிட்ட அனைத்தும் பெறுவதற்காக அளித்திருந்தேன். ஆனால், மத்திய அரசு 2020-21, 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான மேம்பாட்டு நிதியை ரத்து செய்து விட்டது.

நான் அதற்கும் முந்தய எனது பழைய இரண்டு ஆண்டுகளின் மேம்பாட்டு நிதியில் கேட்கிறேன். இதுபோல், பழைய ஆண்டுகளின் நிலுவை, பல எம்.பிக்களின் மேம்பாட்டு நிதியில் உள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2018-19, 2019-20 ஆண்டுகளுக்கான மேம்பாட்டு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனவே, அதை உடனடியாக ஒதுக்கும்படி மத்திய அரசிடம் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x