

மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி 30% சிறுபான்மையின மக்களுக்காக நடக்கிறது, இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வார்கியா சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாஜக தொண்டர்கள் அமாவாசைத் தர்ப்பணம் செய்ய அனுமதி கேட்ட போது மேற்கு வங்க போலீஸார் மறுத்துள்ளனர்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி 30% சிறுபான்மையினரைக் காக்கவே நடைபெறுகிறது. பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
இது மட்டுமல்ல இந்துக்கள் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அரசு தடை போடுகிறது. எங்கள் ஆட்சியில் நிச்சயம் இப்படி இருக்காது, அனைவருக்குமான ஆட்சியாகவே இருக்கும்.
கொல்லப்பட்ட எங்கள் தொண்டர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வேண்டுமா? காலங்காலமாக தர்ப்பணம் கொடுப்பது என்பது இந்துக்களின் பாரம்பரியத்தில் உள்ளதாகும்.” என்றார்.