

கரோனாவினால் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிக்கியவர்களில் 83,348 லட்சம் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
இதன் மீது முஸ்லீம் லீக்கின் தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து மத்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வ பதிலில் கூறியதாவது:
கரோனா பரவல் ஊரடங்கு தளர்விற்கு பின் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு, மே 7 இல் ‘வந்தே பாரத் மிஷன்’ துவங்கியது.
தற்போது ஆறாவது கட்டம் செயல்பாட்டில் உள்ளதில் இதுவரை 13 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 83,348 பேர் தமிழர்கள் ஆவர்.
இவை, பஹ்ரைன், ஈராக், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், குடியரசு நாடு கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.