Published : 17 Sep 2020 08:30 AM
Last Updated : 17 Sep 2020 08:30 AM

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்: டெல்லி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட உமர் காலித் வேண்டுகோள்

டெல்லி கலவரம் தொடர்பாக ஞாயிறன்று கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் உமர் காலித் வீடியோ பதிவு ஒன்றில் அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவர் அந்த வீடியோவில் டெல்லி போலீஸார் கலவரக்காரர்களைக் கைது செய்யவில்லை மாறாக அரசை விமர்சித்தவர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

2 நிமிடம் 18 விநாடிகள் கொண்ட வீடியோவில், “வன்முறையைத் தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை. போலீஸ் முன்னிலையிலும் டிவி கேமராக்கள் முன்னிலையிலும் வன்முறை செய்தனர், நாங்கள் பார்த்தோம். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் கூட வேண்டாம், கூப்பிட்டு விசாரிக்கக் கூட இல்லை.

மாறாக சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்கள் அரசை விமர்சித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது டெல்லி போலீஸ். இவர்களுக்கு எதிராக சாட்சியங்களே அவர்களித்தில் இல்லை.

என் மீது தவறான குற்றங்களைச் சுமத்தி டெல்லி போலீஸ் கைது செய்ய சிலநாட்களாகவே சமயம் பார்த்து வந்தனர்.

பிப்ரவரி 17ம் தேதி அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசிய போது கலவரம், வன்முறை என்று பேசவில்லை, சத்யாகிரகம், அகிம்சை என்றுதான் பேசினேன். இந்நிலையில் எனக்கு எதிராகப் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி எனக்கு எதிராக பொய் சாட்சியங்களை தயாரித்து வருகின்றனர். அரசை விமர்சித்தவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ளவே முயற்சிகள் நடக்கின்றன.

நான் என்ன குற்றம் செய்தேன், இந்த நாடு என்னுடையதும்தான் உங்களுடையதும்தான் என்று பேசியது குற்றமா?

அவர்களுக்கு எதிராகப் பேசுவோரை சிறைக்கு அனுப்ப முயற்சி செய்து வருகின்றனர். எனவே அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x