Published : 17 Sep 2020 07:41 AM
Last Updated : 17 Sep 2020 07:41 AM

இந்து கோயில்கள் மீதான தாக்குதலை அரசு கண்டுகொள்ளவில்லை: ஜெகன் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆந்திராவில் 11 இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஜெகன் மோகன் ஆட்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அசையா சொத்துக்களை தனியாருக்கு விற்க முயற்சிப்பது,திருமலைக்கு செல்லும் பஸ்களின் டிக்கெட்களில் வேற்று மதபிரச்சாரம், தேவஸ்தான டைரிகளை குறைத்திருப்பது போன்றபல விஷயங்கள் அரங்கேறி உள்ளதை உதாரணமாகக் கூறலாம்.

லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் தேருக்கு தீ வைக்கப்பட்டது. நிடமனூரில் உள்ள சாய்பாபா கோயில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. தற்போது விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் வெள்ளித்தேரில் இருந்த 3 வெள்ளி சிங்கங்கள் காணாமல் போயுள்ளன. இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும் முதல்வர் ஜெகன் கண்டுகொள்ளாமல் உள்ளார். இதுகுறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x