

பிஹார் அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, அம்மாநில ஆளுநரிடம் எழுத்துப்பூர்வமான கடிதத்தை இன்று காங்கிரஸ் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பெரும் பின்னடைவை சந்தித்ததை அடுத்து, அவர் பிஹார் மாநில முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். இதனை அடுத்து அவரது நெருங்கிய நண்பரான ஜிதன் ராம் மாஜியை முதல்வர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் பிஹாரின் புதிய முதல்வராக ஜிதன் ராம் மாஜி பதவியேற்கிறார்.
இந்த நிலையில் பிஹார் மாநில காங்கிரஸ் அசோக் சவுத்ரி தலைமையிலான பிரதிநிதிகள், அம்மாநில ஆளுநரிடம், ஐக்கிய ஜனதா தளத்திற்கு எந்த நிபந்தனைகளும் இன்றி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை வழங்கினர்.
இதுகுறித்து, காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவர் சதானந்த் சிங் கூறுகையில், "எங்களுடைய கட்சித் தலைமை பிஹார் மாநில ஜனாதிபதியிடம் ஐக்கிய ஜனதா தளத்திற்கான ஆதரவு கடிதத்தை சமர்பிக்குமாறு இன்று காலை எங்களுக்கு உத்தரவிட்டது” என்றார்.