இந்தியா
திருப்பதியில் பூட்டிய வீடுகளில் திருடிய இளைஞர் கைது
திருப்பதி ரயில் நிலையம் எதிரே ‘விஷ்ணு நிவாசம்’ என்ற பெயரில் பக்தர்களுக்கான தேவஸ்தான விடுதி உள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இவ்விடுதியில் வெளிமாநில பக்தர்கள் தங்கி, சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனந்தபூர் மாவட் டம், கதிரியை சேர்ந்த ஷேக் அகமது (22) சில நாட்களுக்கு முன் ‘விஷ்ணு நிவாச’த்தில் அறை எடுத்து தங்கினார். பின்னர் திருப்பதியில் பூட்டிய வீடுகளில் இரவு நேரத்தில் புகுந்து திருடும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந் நிலையில் நேற்று காலை ‘விஷ்ணு நிவாசம்’ அருகே நின்று கொண்டி ருந்த ஷேக் அகமதுவை போலீஸார் கைது செய்தனர். இவரிடமிருந்து 150 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
