அலிகரில் கரோனா விதிமுறைகளுடன் ரூ.40 லட்சம் நகை திருடிய 3 கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸ்

அலிகரில் கரோனா விதிமுறைகளுடன் ரூ.40 லட்சம் நகை திருடிய 3 கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸ்
Updated on
2 min read

உத்திரப்பிரதேசம் அலிகரில் கடந்த 11 -ம் தேதி கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த மூவரும் இன்று மதியம் நொய்டாவில் தப்பி ஓட முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு கைதாகினர்.

டெல்லியிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள அலிகரின் பன்னா தேவி பகுதியின் சுந்தர் ஜுவல்லர்ஸ்’ என்ற பெயரில் ஒரு நகைக்கடை உள்ளது. இதில் கடந்த 12 ஆம் தேதி மதியம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீர் என 3 கொள்ளையர்கள் நுழைந்தனர்.

அவர்கள் மூவரும் கரோனா பாதுகாப்பு முகக்கவசம் அணிந்தபடி இருந்தனர். உள்ளே வந்தவர்களுக்கு. வாசலில் அளிக்கப்பட்ட பூச்சி மருந்தால் பொறுமையுடன் தங்கள் கைகளையும் கழுவிக் கொண்டனர்.

இவ்வாறு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தவர்களது உண்மை முகம், பிறகு வெளியானது. இதில் கள்ளத்துப்பாக்கிகளின் முனையில் நகைக்கடையில் கொள்ளை அடித்தனர்.

இதன் விசாரணயில் அவர்கள் சவுரப்சிங், மோஹித்சிங் மற்றும் ரோஹித்சிங் ஆகிய அம்மூவர் எனத் தெரிந்தது. மூவரும் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவர்கள்

சமீபத்தில் ஜாமீனில் வெளியான இம்மூவரும் அலிகரின் அருகிலுள்ள கேர் எனும் இடத்தை சேர்ந்தவர்கள் என்பதும் வெளியானது. இவர்களில் சவுரவ் 8, மோஹித் 9 மற்றும் ரோஹித் ஒரு வழக்கும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 5 நாட்களுக்கு பின் உ.பி.யின் நொய்டாவில் செக்டர் 39 பகுதியில் இன்று மதியம் போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த 3 கொள்ளையர்களும் சந்தேகத்திற்குரிய வகையில் பேசினர்.

இதனால், அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அவர்கள் கால்களில் குண்டுகள் பட்டு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் கூறும்போது, ‘‘சிசிடிவி கேமிராவில் பதிவாகின கொள்ளைக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால் மூவரும் அடையாளம் கண்டுவிடப்பட்டு விட்டதால் வேறுவழியின்றி சிக்கியுள்ளனர்.’’ எனத் தெரிவித்தார்.

தற்போது நொய்டாவின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மூன்று கள்ளத்துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் கிரிமினல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் பெயர்பெற்ற அதிகாரியாக இருப்பவர் முனிராஜ். இதனால், அவரிடம் சிக்கினால் தாம் கொல்லப்பட்டு விடுவோம் என அஞ்சி மூவரும் தானாகவே திட்டமிட்டு முன்வந்து சிக்கியதாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in