Last Updated : 15 Sep, 2020 04:19 PM

 

Published : 15 Sep 2020 04:19 PM
Last Updated : 15 Sep 2020 04:19 PM

என்னை பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆள் என்று தாக்கினர், இப்போது உண்மையிலேயே நான் பாஜக-ஆர்.எஸ்.எஸ்.தான்; சிவசேனாவுக்கு சவால் விடும் முன்னாள் கடற்படை அதிகாரி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக சிவசேனாவினரால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் ஷர்மா தற்போது தான் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்து விட்டேன் என்றும் மகாராஷ்ட்ராவில் குண்டர்களின் ராஜ்ஜியத்தை நிறுத்துவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

அவர் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ்பவனில் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, “இன்று முதல் நான் பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். - ஐ சேர்ந்தவன். என்னை அவர்கள் அடித்து உதைத்த போது நான் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்த ஆள் என்று தாக்கினர். இப்போது உண்மையிலேயே நான் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைச் சேர்ந்தவன் தான்.

மகாராஷ்டிராவில் குண்டர்கள் ராஜ்ஜியத்தை ஒழிப்பேன். நான் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரினேன், அவர் மத்திய அரசிடம் பேசுகிறேன் என்று உறுதியளித்தார்.

சட்டம் பாரபட்சமாக இருக்கிறது, அரசியல்வாதியை ஒருவிதமாக நடத்துகிறது, சாமானியனை வேறொரு விதமாக நடத்துகிறது.

நான் கவர்னரிடம் பேசினேன், என்னைத் தாக்கியவர்கள் மீது பலவீனமான புகார்கள் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றேன், கவர்னர் தீர்மானம் நிறைவெற்றி உரியதைச் செய்கிறேன் என்று உறுதியளித்தார். மாநில அரசு கலைக்கப்பட வேண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும் என்றேன், மத்திய அரசிடம் பேசுகிறேன் என்றார்” என்று கூறினார் மதன் ஷர்மா.

மும்பையில் இவர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து கார்ட்டூனை வெளியிட்டதற்காக கந்திவிலி புறநகர்ப்பகுதியில் சிவசேனா ஆட்களால் தாக்கப்பட்டார். இதற்கு உத்தவ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இவரைத் தாக்கியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சனிக்கிழமையன்று இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x